சென்னை: கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்குச் சிகிச்சையளிக்க, 135 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விபரங்கள் அடங்கியப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை, கொரோனா வைரஸ் தொற்று, சமூக பரவலாக இல்லை என்றே தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. ஆனாலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தனியாக வார்டுகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கை வசதியில் 25% கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவிற்கு சிகிச்சைப் பெறுவோர் குறித்த விபரங்களை, தினமும் பொது சுகாதாரத்துறைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியளிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் விபரங்கள்
* கோவை: கற்பகம், கே.எம்.சி.எச்.,
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு: சேலையூர் – பாரத், கேளம்பாக்கம் – செட்டிநாடு, மதுராந்தகம் – கற்பகவிநாயகா, கோவூர் – மாதா, ஏனாத்துார் – மீனாட்சி, மேல்மருவத்துார் – ஆதிபராசக்தி, பூந்தமல்லி – பனிமலர், தண்டலம் – சவீதா, அம்மாபேட்டை – ஸ்ரீ சத்யசாய், குரோம்பேட்டை – பாலாஜி, மாங்காடு – முத்துக்குமரன்; காட்டாங்கொளத்துார் – எஸ்.ஆர்.எம்., ரத்தினமங்கலம் – தாகூர்
* கன்னியாகுமரி: மூகாம்பிகை மருத்துவ கல்லுாரி
*மதுரை: வேலம்மாள் மருத்துவ கல்லுாரி
* பெரம்பலுார்: தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவ கல்லுாரி
* சேலம்: அன்னபூர்ணா, விநாயகா மிஷன், கிருபானந்த வாரியர் மருத்துவ கல்லுாரி
* திருவள்ளூர்: வேலப்பன்சாவடி ஏ.சி.எஸ்., மற்றும் போரூர் ராமச்சந்திரா
* திருச்சி: எஸ்.ஆர்.எம்., மற்றும் கிறிஸ்துவ மருத்துவ கல்லுாரிகள் மருத்துவமனைகள்
* சென்னை: அடையாறு – போர்டிஸ் மலர்; தரமணி – தன்னார்வ சுகாதார சேவைகள்; வேளச்சேரி – பிரசாந்த்; ஷெனாய் நகர் – பில்ரோத், நுங்கம்பாக்கம் – காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை; மயிலாப்பூர் – சி.எஸ்.ஐ., கல்யாணி; ஆழ்வார்பேட்டை – காவேரி; மணப்பாக்கம் – மியாட்; வடபழநி – விஜயா; பெருங்குடி – ஜெம்; பள்ளிக்கரணை – காமாட்சி மெமோரியல்.
* அரியலுார்: ஏ.எஸ்., இமேஜிங் சென்டர், அரியலுார் கோல்டன் மருத்துவமனை
* கோவை: ஜி.குப்புசாமி நாயுடு மெமோரியல், ராமகிருஷ்ணா; கொங்குநாடு மற்றும் கே.ஜி. மருத்துவமனைகள்
* கடலுார்: கிருஷ்ணா, சுபா ஆனந்தம் மருத்துவ மையம்.
* தர்மபுரி: சுபா, ஓம் சக்தி, டி.என்.வி., பாலி கிளினிக்* திண்டுக்கல்: வத்தலகுண்டு லியோனார்டு, ஜோசப், பழனிவேல், உயர் சிறப்பு, கிறிஸ்துவ பெல்லோஷிப் சமூக மருத்துவமனைகள்
* ஈரோடு: சுதா, ஈரோடு மருத்துவ மையம், மாருதி மருத்துவ மையம், 24 கேர் மருத்துவ மையம்
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு: கேளம்பாக்கம் – செட்டிநாடு உயர் சிறப்பு மருத்துவமனை; குரோம்பேட்டை – டாக்டர் ரீலா மருத்துவமனைகள்
* கன்னியாகுமரி: நெய்யூர் – சி.எஸ்.ஐ., மிஷன்; நாகர்கோவில் – கோலி கிராஸ், கெர்டி குட்பர்லே அகஸ்தியர் முனி குழந்தைகள் நலம், பென்சம், டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை
* கருர்: அபிராமி, அமராவதி, அப்பல்லோ லோகோ
* கிருஷ்ணகிரி: ஓசூர் – சந்திரசேகரா, காவேரி மருத்துவமனைகள்* மதுரை: ராகவேந்தர், சரவணா, பிரீத்தி, தேவதாஸ் உயர் சிறப்பு, லட்சுமணா உயர் சிறப்பு, குரு உயர் சிறப்பு மருத்துவமனைகள்.
* நாகை: அருண் பிரியா நர்சிங் ஹோம், விஷ்ணு, காமேஸ்வரம், கோஹாஜ் மருத்துவமனை, மயிலாடுதுறை – சாந்தி நர்சிங் ஹோம், ராம் போன் மற்றும் ஜாயின்ட் மருத்துவமனை
* நாமக்கல்: தங்கம் மருத்துவமனை, மகாராஜா உயர் சிறப்பு, திருச்சங்கோடு விவேகானந்தா மருத்துவ மையம், நாமக்கல் அரவிந்த், எம்.எம்.,
* பெரம்பலுார்: லட்சுமி நர்சிங் ஹோம்
* புதுக்கோட்டை: முத்து மீனாட்சி, ஸ்ரீ துர்கா சர்ஜிகல், ஸ்ரீ விஜய் மருத்துவமனைகள்
* ராமநாதபுரம்: ஆசி உயர் சிறப்பு, கனகமணி மருத்துவமனைகள்* சேலம்: தரண், எஸ்.கே.எஸ்., கோகுலம், எஸ்.பி.எம்.எம்., குறிஞ்சி, மணிபால்
* சிவகங்கை: செந்தில், காரைக்குடி மருத்துவமனைகள்
* தஞ்சாவூர்: அவர் லேடி, கே.ஜி., உயர் சிறப்பு, மீனாட்சி உயர் சிறப்பு, கும்பகோணம் அன்பு
* நீலகிரி: நங்கேம், அஸ்வினி ட்ரீபிள், சங்கயமாதா
* தேனி: என்.ஆர்.டி., டி.என்.கே.எச்.என்.வி., மற்றும் கிருஷ்ணம்மாள் மெமோரியல்
* திருவள்ளூர்: திருவொற்றியூர் – சுகம்; வேலப்பன்சாவடி – மேக்தா, அய்யனம்பாக்கம் – அப்பல்லோ; திருவொற்றியூர் – ஆகாஷ்
* திருவண்ணாமலை: ரமணா மகரிஷி ரங்கம்மாள்
* திருவாரூர்: திருவாரூர் மருத்துவ மையம்; நவஜீவன் * துாத்துக்குடி: ஏ.வி.எம்., மற்றும் புனித இதய மருத்துவமனை
* திருநெல்வேலி, தென்காசி: ஷிபா, கேலக் ஷி மற்றும் பொன்ரா உயர் சிறப்பு மருத்துவமனைகள்
* திருப்பூர்: ஸ்ரீ குமரன், ரேவதி மருத்துவ மையம்
* திருச்சி: ஜி.வி.என்., மற்றும் சிந்துஜா, மாருதி, காவேரி
* வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை: ஸ்ரீ நாராயணி, ஸ்கடர் மெமோரியல், டாக்டர் தங்கம்மா
* விழுப்புரம், கள்ளக்குறிச்சி: ஐமேட் உயர் சிறப்பு, இ.எஸ்.மருத்துவமனை, ஸ்ரீசஞ்சீவி, மரகதம்
* விருதுநகர்: மீனாட்சி மெமோரியல், ஸ்ரீ கிருஷ்ணா, சிட்டி மருத்துவமனை