சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்பவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் ஊடகத்துறையைச் சேர்ந்த ஆ.கோபண்ணா,
பீட்டர் அல்போன்ஸ்,
உ.பலராமன்,
எஸ்.விஜயதரணி எம்எல்ஏ,
சசிகாந்த் செந்தில்,
கு.செல்வப்பெருந்தகை,
பொன்.கிருஷ்ணமூர்த்தி
அமெரிக்கை வி.நாராயணன்,
எஸ்.எம்.இதாயத்துல்லா,
சுதா. இராமகிருஷ்ணன்,
லட்சுமி ராமச்சந்திரன்,
எம்.ஹசீனா சையத்,
பி.வி.இமயா கக்கன்,
ஜி.கே.முரளிதரன்,
கே.சந்திரசேகரன்,
ஜி.முருகையன்,
இனியன் ராபர்ட்
ஆகியோர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள பெயர்களைத் தவிர வேறு எவரையும் விவாதத்தில் பங்கேற்க அழைப்பதை தவிர்க்கும்படி, தொலைக்காட்சி நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கிறோம். மேலும், நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களை விவாதங்களுக்கு தொலைக்காட்சி ஊடகங்களே அழைத்துக்கொள்ளலாம்.
தொலைக்காட்சி விவாதங்களில் இதுவரை நிலவி வருகிற நடைமுறைக்கு மாறாக, பாரபட்சமற்ற முறையில் நடுநிலையோடு விவாதங்களில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் இனி வழங்கப்படும் என நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.