சென்னை

க்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி உள்ளன.

கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சரத்குமார் தலைமை வகிக்கும் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்தன.   இந்த கூட்டணியில் கமலஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்க இரு கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதையொட்டி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.  மீதமுள்ள 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது.  இன்று சமக போட்டியிடும் 40 தொகுதிகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இதில் சென்னையில் துறைமுகம் தொகுதி மட்டும் இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  தவிர திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் நாங்குநேரி பகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகள் சமகவுக்கு வழங்கப்பட்டுள்ளன.  தொகுதிகள் விவரம் பின் வருமாறு: