மும்பை:

இலங்கைக்கு எதிரான 20:20 போட்டி மற்றும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்ததும் இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள், 20:20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிக்கு ஏற்கனவே வீரர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மா பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் ரோகித் ஷர்மா(கேப்டன்), ராகுல், ஷ்ரேயாஸ், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், குல்தீப்யாதவ், தீபக் ஹூடா, ஜஸ்பிரித் பும்ரா,முகம்மது சிராஜ், பாசில் தம்பி, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

இலங்கை தொடர் முடிந்ததும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள் போட்டி, 3, -20:20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி (கேப்டன்), விஜய், ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா, அஷ்வின், ஜடேஜா, பார்தீவ் படேல்,ஹர்திக் பாண்ட்யா, முகம்மது ஷமி, இஷாந்த்ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்