சென்னை:

2017ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வகையில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன.

தமிழகத்திலும் இத்தகைய டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இதற்கிடையில் உள்ளாட்சி எல்லைகளில் உள்ள சாலைகளுக்கு உச்சநீதிமன்றம் விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டது. இதன் பின்னர் வேறு இடங்களில் மதுபான கடைகளை தமிழக அரசு திறந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சி, நகராட்சிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் மதுக்கடைகளை திறக்கக்கூடாது’’ என்று உத்தரவிட்டனர்.