டெல்லி: கலால் முறைகேடு தொடர்பாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மஷிஷ் சிசோடியா வுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடவில்லை என்று சிபிஐ மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் மற்ற 8 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
டெல்லியில் புதிய மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் f கடந்த சிபிஐ டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தது. தொடர்ந்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சிசோடியா வீடு உள்ளிட்ட 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி துணைமுதல்வர் சிசோடியாவின் போன், லேப்டாப் உள்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மணிஷ் சிசோடியா வெளிநாடு தம்பிச்செல்வதை தடுக்க சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டதாக தகவல்கள் பரவின. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சிபிஐ, அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடவில்லை என்று கூறியதுடன், இதுதொடர்பாக மற்ற 8 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.