சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் கோவா அணிக்காக களமிறங்கி உள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக கோவா-வில் நடைபெற்று வரும் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் 120 ரன்கள் எடுத்துள்ளார்.

தனது தந்தை சச்சின் டெண்டுல்கர் போலவே தனது முதல் ரஞ்சி போட்டியில் சதம் அடித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

1988 ம் ஆண்டு மும்பை அணிக்காக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் குஜராத் அணிக்கு எதிரான தனது முதல் ரஞ்சி கோப்பை போட்டியில் சதமடித்து விளாசினார்.

15 வயதில் சதம் அடித்து மிக இளம்வயதில் முதல்தர கிரிக்கெட்டில் சதம் அடித்தவர் என்ற சாதனையை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் சச்சின் டெண்டுல்கர்.

சச்சினை போல் முதல் போட்டியிலேயே சதமடித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இடம்பெற கிரிக்கெட் வீரர்களிடையே கடும் போட்டி நிலவுவதால் கோவா அணியில் தேர்வாகி அந்த அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.