பகவத்கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்
இன்று முதல் பகுதி
- வாழ்வென்பதுஉயிர் உள்ள வரை மட்டுமே!
- தேவைக்கு செலவிடு.
- அனுபவிக்க தகுந்தன அனுபவி.
- இயன்றவரை பிறருக்கு உதவி செய்.
- ஜீவகாருண்யத்தை கடைப்பிடி.
- இனிஅநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
- உயிர்போகும் போது, எதுவும் கொண்டு செல்லப் போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
- மடிந்தபின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
- உயிர்பிரியத் தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
- உயிர்உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
- உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.
- உன் குழந்தைகளைப் பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
- அவ்வப்போது பரிசுகள் அளி.
- அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
- பெற்றோர்களைமதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னைக் கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
- அதைப்போல,பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்குச் சண்டை போடலாம்.
நாளை இரண்டாம் பகுதியில் மேலும் அறிந்து கொள்வோம்.