24 ஏகாதசி விரதமும் அதன் பலன்களும் பற்றிய பதிவுகள் – பகுதி 2

விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம்.  இது 24 வகைப்படும்.   ஒவ்வொரு ஏகாதசி விரதத்துக்கும் ஒரு பலன் உண்டு.

நேற்று ஒரு சில ஏகாதசி விரதம் குறித்து அறிந்தோம்

இன்று நாம் மேலும் ஏகாதசி விரதம் குறித்து இங்கு அறிவோம்.

 

பாபாங்குசா ஏகாதசி

வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

இந்திரா ஏகாதசி

மூதாதையருக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள்.

பிரபோதின ஏகாதசி/கைசிக ஏகாதசி

அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

ரமா ஏகாதசி

இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.

வைகுண்ட ஏகாதசி

உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.

உற்பத்தி ஏகாதசி

பகையை வெல்ல உதவும்.

பீஷ்ம, புத்திர ஏகாதசி

புத்திரபாக்கியம் தரும்.

சபலா ஏகாதசி

ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

ஜெய ஏகாதசி

அகால மரணம் அடைந்த மூதாதையர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.

ஷட்திலா ஏகாதசி

கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கு ,பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

ஆமலகி ஏகாதசி

நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றிப் பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.

விஜயா ஏகாதசி

வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனைப் பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.