சென்னை:
ன்று எல்.ஐ.சி. பொதுப்பங்குகள் வெளியிடப்படுகிறது.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பொதுப்பங்குகள் விற்பனை இன்று முதல் துவங்கும் என்றும், இந்த விற்பனை மே 9 ஆம் தேதி முடிவடையும்.

இதில் முதற்கட்டமாக 5 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்து, இதற்கான வரைவு அறிக்கையை செபியிடம் மத்திய அரசு தாக்கல் செய்தது.

காப்பீட்டு நிறுவனத்தை முழுவதுமாக வைத்திருக்கும் அரசாங்கம், 3.5 சதவீத பங்குகளுக்குச் சமமான சுமார் 22 கோடி பங்குகளை விற்று ரூ.21,000 கோடியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது.

பங்குகளின் விலையில் இருந்து எல்.ஐ.சி. ஊழியர்களுக்கு 45 ரூபாயும், பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாயும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.