யார் அந்த காமுக கவிதைத் திருடர்?

Must read

%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d
நெட்டிசன்:
ம.தி.மு.க. வளைகுடா பொறுப்பாளர் வல்லம் பஷீர் (Vallam Basheer) அவர்களின் முகநூல் பதிவு:
“என் நெருங்கிய நண்பனின் மூத்த சகோதரி  அவர். அண்ணாமலை பல்கலை கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் . தினமும் ஏதாவது கவிதைகளை எழுதி கொண்டிருப்பார் , அதை புத்தகமாக்க வேண்டும் என்று அவருக்கு நீண்ட நாள் ஆசை . தன் ஆசையை லண்டனில் உள்ள கணவரிடம் சொல்ல , அவரும் ஏதேனும் ஒரு பதிப்பகம் மூலம் அந்த கவிதை தொகுப்புகளை புத்தகமாக்க முயற்சி மேற்கொண்டார் .
மூன்று லட்சம் ரூபாய் தந்தால் தன்னுடைய பதிப்பகத்தின் சார்பில் அந்த கவிதை நூலை வெளியிடுகிறேன் என்றார் ஒரு வியாபாரி.  மனைவியின் ஆசையை நிறைவேற்ற மூன்று லட்சம் கொடுத்தார் அந்த அப்பாவி கணவர் . கவிதை தொகுப்பையும் பெற்று கொண்டு இன்று வரை அதை வெளியிடவில்லை அதில் இருந்த பல கவிதைகளை தன்னுடைய புத்தகங்களில், தான் எழுதியாக வெளியிட்டார் அந்த கவிதை திருடர் .
இதை விட கொடுமை அந்த சகோதரியை இரவு நேரங்களில் கைபேசியில் அழைத்து மார்பகங்கள் குறித்து ஒரு கவிதை எழுதினால் எப்படி தொடங்குவது ?  அல்குல் பற்றி கவிதை எழுதினால் எப்படி இருக்கும் ??  என்றெல்லாம் தொடர்ந்து கேட்டவர் . ஒரு நாள் பின்னிரவு ஒன்னரை மணிக்கு அழைத்து காமலீலை என்கிறார்களே அது எப்படியானது என்று கேட்டிருக்கிறார் .
இந்த காமவெறியனின் நோக்கம் அறிந்த அந்த சகோதரி கணவனிடம் இதை சொல்ல முடியாமல் தன் தம்பியிடம் சொல்ல , அவன் என் நெருங்கிய நண்பன் . இதை அப்படியே என்னிடம் சொல்லி கதறினான் . அந்த நாயை ரோட்டில் விட்டு செருப்பால் அடிக்கணும் மாப்ளை என்றான் .
அந்த நாயை அடிக்க நீ ஏன் மாப்ளை இரு என்று சொல்லி என் உறவினரான காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஒருவர் மூலம் இந்த பிரச்சனையை எதிர்கொண்டோம் . அவரும் வாய்மொழி புகாராக ஏற்றுக்கொண்டு அந்த காம மிருகத்தை அழைத்து வர சொல்லி அடையார் காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி அனுப்பினார் .
அந்த  :… “ எல்லாம்  இன்று என் தலைவனை பிழை என்று சொல்லும் போது அன்று என் நண்பன் சொன்னதையே இப்போது செய்யலாம் என்று தோன்றுகிறது.”

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article