சென்னை: ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்று தொகுதிவாரியாக பிரசாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வரும் 24ந்தேதி ( ஜூலை 24-ம் தேத) முதல் தனது 2வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 2026 தேர்​தலை முன்​னிட்டு பல்​வேறு பகு​தி​களில் உள்ள நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் மற்​றும் திமுக அரசை கண்​டித்து அதி​முக ஆர்ப்​பாட்​டங்​களை அறி​வித்து வரு​கிறது. மேலும்,  அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி  மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்று தொகுதிவாரியாக  முதல்கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார்.

அதாவது, ஜூலை 7-ம் தேதி  கோவை மேட்டூப்பாளையத்தில் முதல்​கட்ட பிரச்​சார சுற்றுப்​பயணத்தை பழனி​சாமி கோவை​யில் தொடங்​கிய நிலையில்,  தொகு​தி​வாரி​யாக பிரச்​சா​ரம் செய்​து​வருகிறார்., செல்​லும் வழிகளில், ஆங்​காங்கே அதிக அளவில் ஒரே தொழிலை செய்​யும் நெச​வாளர்​கள், விவ​சா​யிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் செய்​வோர் உள்​ளிட்​டோரை சந்​தித்​து, அவர்​களின் குறை​களை கேட்டு வரு​கிறார். அப்போது மீண்டும் 2026ல் ஆட்சிக்கு வந்ததும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறுவதுடன், பெண்களுக்கு உரிமை தொகையாக ரூ.1500 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது  முதற்​கட்ட பிரச்​சா​ரம் வரும் 33 தொகுதிகளில் ஜூலை 21-ம் தேதி​யுடன் முடிவடைகிறது

இதையடுத்து,  2-ம் கட்ட பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்​கி, 36 தொகு​தி​களுக்கு செல்​வதாக அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

 இதுதொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளியிட்ட அறிக்​கையில்,  அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி 2-ம்​கட்ட பிரச்​சார பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்​கி, ஆக.8-ம் தேதி நிறைவு செய்ய உள்​ளார்.

இதன்​படி, 24-ம் தேதி புதுக்​கோட்டை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட கந்​தர்​வக்​கோட்​டை, ஆலங்குடி, அறந்​தாங்கி தொகு​தி​களி​லும்,

25-ம் தேதி விராலிமலை, புதுக்​கோட்​டை, திரு​ம​யம் தொகு​தி​களி​லும்,

26-ம் தேதி சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி, திருப்​பத்​தூர், சிவகங்கை தொகு​தி​களி​லும், 30-ம் தேதி மானாமதுரை, ராம​நாத​புரம் மாவட்​டம் பரமக்​குடி, திரு​வாடணை ஆகிய தொகு​தி​களி​லும்,

31-ம் தேதி ராம​நாத​புரம், முதுகுளத்​தூர், தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்​தி​குளம் ஆகிய தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உள்​ளார்.

ஆகஸ்டு 1-ம் தேதி தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்​டி, ஓட்​டப்​பி​டாரம், தூத்​துக்​குடி,

ஆகஸ்டு 2-ம் தேதி திருச்​செந்​தூர், வை​குண்டம், திருநெல்​வேலி மாவட்​டம் ராதாபுரம், 4-ம் தேதி திருநெல்​வேலி மாவட்​டம் பாளை​யங்​கோட்​டை, திருநெல்​வேலி, 5-ம் தேதி அம்​பாச​முத்​திரம், தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம், தென்​காசி தொகு​தி​களில் பயணம் மேற்​கொள்​கிறார்.

ஆகஸ்டு  6-ம் தேதி தென்​காசி மாவட்​டம் கடையநல்​லூர், வாசுதேவநல்​லூர், சங்​கரன்​கோ​வில், விருதுநகர் மாவட்​டம் ராஜ​பாளை​யம், ஸ்ரீவில்​லிபுத்​தூர், சிவ​காசி,

ஆகஸ்டு  8-ம் தேதி சாத்​தூர், விருதுநகர், அருப்​புக்​கோட்டை ஆகிய தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உள்​ளார்.

2-ம்​கட்ட பிரச்​சா​ரத்​தில் மொத்​தம் 36 தொகு​தி​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பிரச்​சா​ரம்​ செய்​ய உள்​ளார்​.

இவ்​வாறு அறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.

‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’; மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி