சென்னை: அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம் என மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான, ஜெ. நினைவுநாளில் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினரில் அனுசரிக்கப்படுகிறது. இதையட்டி, அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை ஜெயலலிதா என்றும், அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்த்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை, இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் இதயதெய்வம் புரட்சித்தலைவி “#அம்மா” அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன். அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய “அமைதி, வளம், வளர்ச்சி” பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!
இவ்வாறு கூறியுள்ளார்.