சென்னை: சாதி – மதம் – அரசியல் கடந்து #ஓரணியில்_தமிழ்நாடு வெல்லட்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில், தமிழக முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தவும், தி.மு.க., அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை கூறவும், வீடு வீடாக சென்று கட்சி உறுப்பினர்களை சேர்க்கவும் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இந்த திட்டத்தை ஜுலை 1ந்தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். அதன்படி, திமுகவினர், உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க, சாதி – மதம் – அரசியல் கடந்து #ஓரணியில்_தமிழ்நாடு வெல்லட்டும்! இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்! என தெரிவித்துள்ளார்.