சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்று வரும் நிலையில், பாரத் பந்த் வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்! ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் இன்று 12வது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் விவசாயிகள் பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பந்த் நடைபெற்று வருகிறது. இந்த பந்த் காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டுமே நடைபெறுகிறது.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கும், பாரத்பந்த்-க்கும் ஆதரவு தெரிவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,  உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது! உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்! உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை! #StandWithFarmers என நடைபெறும் #BharatBandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்!  என கூறியுள்ளார்.