அதுபோல, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை மடிக்கணினிகளின்மூலம் படிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான திட்டத்தையும் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் வீடியோ வடிவில் வழங்கப்படவுள்ளது.
இதற்காக சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டியோ தயார் செய்யப்பட்டு பாடங்கள் வீடியோ வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோக்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலை யில், இன்று முதல், 12-ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி வீடியோவை பதிவிறக்கம் செய்து அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் பள்ளி தலைமையாசிரியரை தொடர்புகொண்டு மேலும் விவரம் பெறலாம்.