சென்னை:
கஸ்டு 1ம் தேதி முதல் தொலைக்காட்சி வழியாக அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு பாடம் நடத்தப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்ற பாதிப்பு காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. அடுத்த கல்வியாண்டி தொடங்கிய நிலையில், தனியார்  பள்ளி கல்லூகள்  ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு  நடத்தி  வருகிறது.
இதனிடையே அரசு பள்ளி மாணாக்கர்களின் கல்வி கேள்விக்குறியானது. பெரும்பாலோனோரிடம், ஸ்மார்ட் போன், இணையதள வசதி இல்லாததல், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தொலைக்காட்சி மூலம் பாடம் எடுக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முயற்சி மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில், 14 தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் முதன்முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் மாநிலம் தமிழகம் தான் என்றும், பள்ளி திறப்பு மற்றும் பாடங்கள் குறைப்பு தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாகவும்  தெரிவித்தார்.