சென்னை

ன்று மாலை 6.30 மணிக்கு நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகும் என  தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் அறிவித்துள்ளது.

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.தற்போது  இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. \அக்டோபர் மாதம் 19-ம் தேதி இப்படம்  வெளியாக உள்ள நிலையில்ல் இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அதிவேகமாக வைரல் ஆனது.

லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆயினும், எத்தனை மணிக்கு டிரைலர் வெளியாகும் என்பது பற்றி தெரிவிக்காமல் இருந்து வந்தது.

தற்போது லியோ படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியாக உள்ளது