சென்னை:
ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 48-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறுத்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிரான புகார்களை தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்டெர்லைட் ஆலையில் மாசுக்கட்டுப்பாடு சாதனங்கள் சரிவர இயக்கப்படுகிறதா? என்பது கண்காணிக்கப்படுகிறது. ஆலையிலிருந்து வெளியேறும் புகை தகுந்த சுத்திகரிப்புக்கு பின்னே வெளியேற்றப்படுகிறது. விரிவாக்க பணிகள் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியிலே நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது குறித்து சட்டப்படி பரிசீலிக்கப்படும்’’ என்றார்.