
டில்லி,
அரசு அனுமதித்ததை விட அதிகமாக தாதுமணல் எடுத்தால், அவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், தனியார் நிறுவனங்களை தாது மணல் எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில், அரசு அனுமதித்தை விட, அதிக அளவு எடுக்கப்படுவதால், அந்த பகுதி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபல வழக்கறிஞர் பிரசாத் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்இ ஒடிசாவில் மட்டும் இரும்பு தாது எடுத்ததில் ரூ.60 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, உச்ச நீதிமன்றம், அரசு அனுமதித்ததை விட அளவுக்கு அதிகமாக தாதுமணல், இரும்பு தாதுக்கள் எடுப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.
மேலும், பிறருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தாதுமணல் எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது
[youtube-feed feed=1]