கோவை: அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினால், அதிமுகவைச் சேர்ந்த  முன்னாள்  அமைச்சர்கள் உள்பட யாராக இருந்தாலும், அவர்கள்மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்களா முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தற்போதை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறையினரைக் கொண்டு  தொடர் ரெய்டு நடத்தி வருகிறது. இது அதிமுகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தது.  அதன்படி, அதிமுக சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் சடட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட பலர், ரெய்டு நடத்தும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தனர். அதிமுக ஆட்சிக்கு வரும்போது, ரெய்டு நடத்தும் அதிகாரிகள் ஓய்வு பெற்றிருந்தாலும், அவர்மீது நடவடிக்கை எடுப்போம் என மிரட்டல் விடுத்தனர். இது அரசு அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கோவையில் நிகழ்சி ஒன்றில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுக அரசின் மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி,  அதிமுகவினரின்  நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் உச்சபட்சக் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அதிமுகவினர் விரக்தியின் அடிப்படையில் இப்படி பேசி இருக்கின்றனர். அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது சரியல்ல, வார்த்தைகளைக் கவனித்துப் பேச வேண்டும், முகம் சுளிக்காத அளவுக்குப் பேச வேண்டும். கடந்த கால நிகழ்வுகளை மறைத்து அதிமுகவினர் நேற்றைய கூட்டத்தில் பேசி இருக்கின்றனர். இதற்காக அதிமுகவினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.  அரசு அதிகாரிகளை வார்த்தைகளில் மிரட்டும் வகையில் பேசுவதை அதிமுகவினர் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

https://patrikai.com/controversial-talk-on-soil-theft-case-registered-against-dmk-karur-candidate-senthil-balaji-under-6-sections/