லெபனான் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாத நிலையில், இன்று வெற்றிகரமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இஸ்ரேல், சிரியா உள்ளிட்ட நாடுகளை அண்டை நாடாக கொண்ட லெபானானில் கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் நடந்திருக்க வேண்டும் ஆனால், ஆட்சி ஸ்திரமின்மையால் தேர்தலை தள்ளிப்போடும் வகையில் நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் மேற்கொண்டு இன்று தேர்தல் நடைபெற்றது.

128 இடங்களை கொண்ட லெபனானின் நாடாளுமன்றத்திற்கு  லெபனானின் முக்கிய அரசியல் மற்றும் போராளிகள் இயக்கமான ஹெஸ்புல்லா கட்சி போட்டியிடுகிறது. மேலும் ஆளும் கட்சியியும் போட்டியிடுகிறது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கும் என்றும்,  இன்று இரவு அல்லது நாளை யார் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரிய வரும்.