மும்பை

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொள்வோருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

பொதுவாக பாலின பாகுபாடுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் காட்டப்படும் சலுகைகளின் வித்த்யசம்குரித்து மட்டுமே பேசி வருகின்றனர். அதே நேரத்தில் மூன்றாம் பாலினத்தை பற்றி யாரும் தெரிவிப்பது இல்லை. விதி எண் 377க்கு தடை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகே அனைவரும் இது குறித்து சற்றே பேசத் தொடங்கி உள்ளனர்.

ஆணாக பிறந்த பிரபு என்பவர் வங்கி பணியாளர் தேர்வு அலுவலகத்தில் பணி புரிகிறார். அவர் பணியில் சேர்ந்த பிறகு அவரை அனைவரும் ஆண் என கருதி வந்தனர். ஆயினும் அவர் தன்னை மனதளவில் பெண் என உணர்ந்தார். அவர் 7 மாதங்கள் ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை செய்துக் கொண்ட பிறகு தன்னை முழுப் பெண்ணாக மாற்றிக் கொள்ள விரும்பினார். அதற்கு ஒரே வழி பாலின மாற்று அறுவைச் சிகிச்சை ஆகும்.

தற்போது தன்னை பிரகாசினி என தெரிவித்துக் கொள்ளும் பிரபு அறுவை சிகிச்சை செய்துக் கொள்வதற்காக பணியை விட்டு விலகி மீண்டும் பெண்ணாக மாறிய பிறகு புதியதாக பணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவர் அலுவலகத்தில் அவர் உணர்வை மதித்து அவருக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரகாசினி இந்த அறுவை சிகிச்சைக்கு சுஆர் 2 லட்சம் செலவாகலாம் எனவும் 1.5 மாதம் விடுப்பு எடுக்க நேரிடலாம் எனவும் கூறி உள்ளார்.

அடுத்ததாக டெக் மகேந்திரா என்னும் தனியார் நிறுவனமும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொள்வோருக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் இந்த ஊழியர் குறித்த விவரங்களை நிறுவனம் யாருக்கும் தெரிவிக்க மாட்டோம் எனவும் உறுதி அளித்துள்ளது.