டில்லி

குடியரசு தின விழாவையொட்டி காவல்துறையினரின் விடுமுறைகள்  ரத்து செய்யப்பட்டுள்ளன.

வரும் 26 ஆம் தேதி நாடெங்கும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது.   டில்லியில் குடியரசு தினத்தையொட்டி அணிவகுப்பு நடைபெற உள்ளது.  இம்முறை கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு பிரமுகர் அழைக்கப்படவில்லை.   பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டில்லி சிறப்பு காவல்துறை ஆணையர் “வரும் 26 ஆம் தேதி டில்லியில் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற உள்ளது.  இதையொட்டி அணிவகுப்பில் பங்கேற்பது மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் மாநில காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதையொட்டி மாநில காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுகிறது.  எனினும் மருத்துவக் காரணங்களுக்கான விடுமுறை மட்டும் அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.