க்னோ

த்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆலோசனை செய்து வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெற உள்ளன.  கொரோனா அச்சுறுத்தலால் தேர்தல் ஆணையம் நேரடி பிரச்சாரத்துக்குத் தடை விதித்துள்ளது.  அனைத்துக் கட்சிகளும் இணையத்தின் மூலம் பிரசாரம் செய்து வருகிறது.  தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவைத் தோற்கடிக்க மற்ற கட்சிகள் தீவிரமாக பணியில் உள்ளன.   சமாஜ்வாதி கட்சியில் பல பாஜகவினர் இணைந்துள்ளனர். இதற்குப் பதிலடி கொடுப்பது போல் பாஜகவினர் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவை கட்சியில் நேற்று இணைத்துள்ளனர்.

இதற்கு முன்பு உத்தரப்பிரதேச முதல்வராக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பதவி வகித்த போது மேலவை உறுப்பினராக இருந்தார்.  அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.  தற்போதைய பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத் இதுவரை சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.  இம்முறை அவர் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இதையொட்டி அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியிடுவாரா என எழுந்த கேள்விக்கு அகிலேஷ் யாதவ், “ஏற்கனவே என்னை மக்களவைக்கு அசாம்கர் தொகுதி மக்கள் தேர்வு செய்து அனுப்பி வைத்துள்ளனர்.  அவர்களுடன் நான் ஆலோசனை நடத்தி வருகிறேன்.  அதற்குப் பிறகு நான் உ பி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய உள்ளேன்” எனப் பதில் அளித்துள்ளார்.