திருப்பதி

திருப்பதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விஐபி தரிசன டிக்கட்டுகள் ரூ.10,500 விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது கோவிலில் தரிசனத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  தற்போது இணையம் மூலம் ரூ.300 டிக்கட்  மற்றும் இலவச தரிசனத்துக்குப்  பதிவு செய்தோர் மட்டுமே அனுமதிக்கபடுகின்றன்ர்.  கடந்த 5 ஆண்டுகளாக வாணி அறக்கட்டளைக்கு ரூ.10000 நன்கொடையாக அளிப்போருக்கு ரூ. 500 கட்டணத்தில் விஐபி டிக்கட் அளிக்கப்படுகிறது.

பக்தர்கள் இந்த திட்டத்தில் இணையம் மூலம் நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கட்டுகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஆந்திர மாநில சுற்றுலாத்துறை விரைவில் திருப்பதி சர்வதேச்ந விமான நிலையத்தில் சிறப்பு மையம் அமைக்க உள்ளது.  இங்கு பக்தர்கள் ரூ.10,500 செலுத்தி விமான நிலையத்திலேயே விஐபி டிக்கட்டுகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள், “இந்த திட்டத்தினால் திருப்பதி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் பக்தர்கள் விமான நிலையத்திலேயே சிரமம் இன்றி விஐபி தரிசன டிக்கட்டுகளை வாங்க முடியும்.   தவிர உதான் திட்டத்தின் மூலம் திருப்பதியில் இருந்து நாட்டின் பிறபகுதிகளுக்கு விரைவில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.  எனவே இது மிகவும் பயன் அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.