சென்னை,
ஒவ்வொருவரும் தங்களது அடிப்படை கல்வியை தாய்மொழியில்தான் கல்வி கற்க வேண்டும் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
சென்னை தி. நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நிர்மலா தேஷ் பாண்டேவின் 88வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
நிர்மலா தேஷ்பாண்டேவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குடியரசு தலைவர், தக்கர் பாபாவின் புதிய சிலையையும் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தாய்மொழி அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொருவரும் அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும். பின்னர் கூடுதலாக பல மொழிகளை கற்பதில் தவறில்லை. பல மொழிகள் கற்பதால் அது எதிர்கால வாழ்வுக்கு பயன்படும்.
இவ்வாறு வெங்கைய்யா நாயுடு பேசினார்.