புதுடெல்லி: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 100வது தடவையாக பங்கேற்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் லியாண்டர் பயஸ்.
தற்போது 46 வயதாகும் லியாண்டர் பயஸ், இதுவரை மொத்தம் 97 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 1996ம் ஆண்டின் அட்லாண்டா ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்று பலரின் கவனத்தை ஈர்த்தார்.
இதுவரை, கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என்று மொத்தம் 18 முறை கோப்பை வென்றுள்ளார். டேவிட் கோப்பை இரட்டையரிலும் அதிக வெற்றிகளை குவித்துள்ளார்.
இவர் கடந்த 1991ம் ஆண்டு முதன்முதலாக கிராண்ட்ஸ்லாம் அரங்கில் நுழைந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று ஓய்வுபெறும் திட்டத்தில் இருந்த லியாண்டர் பயஸ், ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தனது கிராண்ட்ஸ்லாம் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.