சென்னை உள்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த வடக்கு மண்டலத்தில் கட்சிகளின் முன்னணி நிலவரம் குறித்த பட்டியல் இங்கே வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாலான இடஙகளில் திமுகவே முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் மண்டலங்கள் வாரியாக பிரிக்கப்பட்டு, தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்கள் வடக்கு மண்டலங்கள் என்று கூறப்படுகிறது. இந்த மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவே  முன்னிலையில் உள்ளது.