பிரதீபா

க்கீரன் இதழின் பொறுப்பாசிரியர் கோவி. லெனினின் மனைவியான எழுத்தாளர் பிரதீபா இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 37.

முகநூலில் மிகத் தீவிரமாக சமூக, அரசியல் பிரச்சினைகள் குறித்த எழுதிய பிரதீபா பல இதழ்களிலும் சமூக நிகழ்வுகள் குறித்து கட்டுரைகள் எழுதினார். .

கடாபியின் வரலாற்று நூல், ‘நிழலாய்த் தொடரும் நிஜங்கள்’ என்ற பெண்களின் வாழ்க்கை  குறித்த நூல்களை எழுதினார். அழகுக்குறிப்புகள் குறித்தும் நூல் எழுதினார்.

திருநங்கையர் நலனுக்காகச் செயல்படும் ‘பார்ன் டு வின்’ என்ற அமைப்பின் கௌரவப் பொறுப்பில் இருந்தபடி, திருநங்கையருக்கான பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வந்தார்.  திருநங்கையர் குறித்த அவர் எழுதிய நூல் விரைவில் வெளியாக இருக்கிறது.

சமகால நிகழ்வுகள் குறித்த அறிவார்ந்த கருத்துகளை விவாதிக்கும், கருத்தரங்குகள் நடத்தும் சமூக ஊடக செயற்பாட்டாளர் குழுவான Smagன் செயற்குழு உறுப்பினராக இயங்கிவந்தார்.

இணையதள திமுகவினருக்காக நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று, தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பரிசு பெற்றார்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் திரை குறும்படப் போட்டிக்கான நடுவர் பொறுப்பில் பணியாற்றினார்.

தொடர்ந்து உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருந்த சூழலிலும் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, பொதுத்தளத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ராஜபாளையத்தில் நடைபெறவிருந்த ஒரு திருண விழாவில் பங்குகொள்ள சென்றவர் இன்று அதிகாலை தூக்கத்திலேயே காலமானார்.

அவரது உடல் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு தற்போது, திருவல்லிக்கேணி ஜானி ஜான் கான் தெருவில் உள்ள  நக்கீரன் இதழின் பழைய அலுவலகத்தில் அ]சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலம் 24.11.2017 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 044 – 4399 3000

கி.வீரமணி

ந்த நிலையில் எழுத்தாளர் பிரதீபா மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ள இரங்கல் அறிக்கையில், “சுயமரியாதை இயக்க பாரம்பரியத்தில் வந்த, “நக்கீரன்ட இதழ் பொறுப்பாசிரியர் நமது அருமைத் தோழர் கோவி. லெனின் அவர்களின் வாழ்விணையர் நமது அருமை சகோதரி பிரதீபா  அவர்களின் திடீர் மரணம்  அதிர்ச்சியை அளிக்கக்கூடியது. பெரியார் திடலில் நடக்கும் அத்துனை நிகழ்விலும்  குடும்பத்துடன் வரத் தவறாதவர்கள். முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த தம்பதி, லெனின் – பிரதிபா இணையர்.

அவர்களது ஒரே மகள், நமது அருமை மகள் தமிழ் நிலா, தொடர்ந்து  பெரியார் பிஞ்சு குழந்தைகள் பழகு முகாமில் பங்கேற்று வருபவர்” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் அறிக்கையில், “ நக்கீரன் பொறுப்பாசிரியரும், நண்பருமான திரு.கோவி.லெனின் அவர்களின் துணைவியார் திருமதி பிரதீபா அவர்கள் மறைந்த துயரச்செய்திக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். திராவிட இயக்கக் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டவராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் விளங்கிய பிரதீபா, இணையத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்பவர்களில் முதன்மையானவராக விளங்கியவர்.

மு.க.ஸ்டாலின்

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, துணைவியாரை இழந்து வாடும் திரு.கோவி.லெனின் அவர்களுக்கும், குழந்தைக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர்

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுத்த  இரங்கல் செய்தியில், “தமிழகத்தின் முன்னணி வார இதழ்களில் ஒன்றான நக்கீரன் பொறுப்பாசிரியர் திரு. கோவி லெனின் அவர்களது இளம் மனைவி திருமதி. பிரதீபா அவர்களது மறைவு செய்து கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பத்திரிகை உலகில் தனக்கென தனி முத்திரையோடு செயல்பட்டு வரும் திரு. கோவி லெனின் அவர்களது மனைவியின் மறைவு அவருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

திரு. கோவி லெனின் அவர்களது மனைவி குடும்பத் தலைவியாக மட்டுமல்லாமல், எழுத்தாளராக, சமூக பிரச்சினைகளில் அக்கறையுள்ள பெண்ணியவாதியாக விளங்கியவர். முகநூலில் தனது கருத்துக்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியவர்.

 

திருமதி. பிரதீபா அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் திரு. கோவி லெனின் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

வைகோ அஞ்சலி.. உடன் கோவி.லெனின், “நக்கீரன்” கோபால்

இன்று மாலை சென்னைக்கு கொண்டுவரப்பட்ட பிரதீபாவின் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், :நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி லெனின் அவர்களின் மனைவி சகோதரி பிரதீபாவின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது. உற்ற துணையை இழந்துவாடும் சகோதரர் லெனின் அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.  லெனின் குடும்பத்தாரின் பெருந்துயரத்தை நாம் தமிழர் கட்சி பகிர்ந்துகொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.