சென்னை

ன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சமண மதத்தை உருவாக்கியவரும்,  அம்மத தலைவருமான மகாவீரர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.   அவர் அகிம்சையை போதித்தவர் என்பதால் ஒவ்வொரு வருடம் போல இவ்வருடமும் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   இன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : பகவான் மகாவீரர்  பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் அன்பும், அறநெறியும் தழைத்தோங்கிட மக்கள் அனைவரும் பகவான் மகாவீரரின் போதனைகளை மனதில் நிறுத்தி அன்பு வழியில், அறநெறி சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் :  தமிழ்நாட்டில் உள்ள ஜைன சமுதாய மக்கள் அனைவரும் மகாவீரர் பிறந்த நாளை உரிய முறையில் கொண்டாடி மகிழ்ந்திட மகாவீரர் பிறந்த நாளுக்கு  அரசு விடுமுறை அளித்தது திமுக அரசு. 2002ல் வந்த அதிமுக அரசு அதை ரத்து செய்தாலும், மீண்டும்  2006ல் அமைந்த திமுக அரசு மகாவீரர் பிறந்த நாளுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக மீண்டும் அரசு விடுமுறையை அனுமதித்தது என்பதை நினைவு கூர்ந்து, மகாவீரர் பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஜைன சமய மக்கள் அனைவருக்கும் திமுகவின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

இவர்களைப் போல் பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சமண மக்களுக்கு பத்திரிகை.காம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.