மியன்மர் நாட்டில், பெரும்பான்மை பவுத்தர்களால் தொடர்ச்சியாக கொடுமைகளுக்கு ஆளாகிவரும் இஸ்லாமிய மக்களுக்கு நிவாரண பொருட்களுடன் முதல் கப்பலை மலேசியா அனுப்பி வைத்தது.
மியன்மார் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ளது ரோஹின்யா மாநிலம். சிறுபான்மை மதத்தவரான இஸ்லாமியர்கள் இங்கு கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை, பெரும்பான்மை புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் கொடுமைப்படுத்தி வருன்றன.
இஸ்லாமிய பெண்களை வன்புணர்வது, இஸ்லாமிய ஆண்களை கொல்வதும் தொடரந்து நடந்துவருகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2300 டன் எடை கொண்ட உணவு, மருத்து மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு, மலேசிய கப்பல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கிளம்பியது.
மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பலை, அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக் கொடிசைத்து வழியனுப்பி வைத்தார்.
அப்போது அவர், “மியான்மரில் இஸ்லாமிய சகோதரர்கள் துயரத்தை அனுபவித்துக்கொண்டிருப்பதை தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “”நாம் முஸ்லிம்கள், இனி நமது ரோஹின்யா சகோதர சகோதரிகள், சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதையும், உயிருடன் எரித்து கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களின் வலிகள் துன்பங்களை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது. அவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்” என்று பேசினார்.
நிவாரண பொருட்களுடன் கிளம்பிய கப்பல், வரும் 9ம் தேதி, மியன்மாரின் மிகப்பெரிய துறைமுக நகரான யாங்கோனை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அங்கிருந்து ரோஹின்யா பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படும்.