500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததை எதிர்த்து வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதி மன்றத்திலும், மும்பை உயர்நீதி மன்றத்திலும் இரு வெவ்வேறு வழக்குகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

notes

மும்பையை சேர்ந்த்க வழக்கறிஞர் சங்கம் லால் பாண்டே அரசின் இந்த முடிவுக்கு தடை கோரி உச்சநீதி மன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். மும்பை உயர்நீதி மன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் ஜாம்ஷெட் மிஸ்ட்ரி மற்றும் ஜாபர் ஷேக் ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த அறிவிப்புக்கு தடை கோரியுள்ளனர். “இது சட்டவிரோதமானதும் தன்னிசையானதுமான அறிவிப்பு ஆகும். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும்” என்று அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் -8 அறிவிப்புக்கு முன்னர் நவம்பர் 2-ஆம் தேதி அரசு வெளியிட்ட வேறொரு அறிவிப்பில் அரசு புதிய நூறு ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் அடுத்த 15 நாட்கள் 10% ஏடிஎம்கள் வழியாக அந்த புதிய 100 ரூபாய் நோட்டு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பெரிய நடவடிக்கையை 6 நாட்களுக்குள் எப்படி அரசால் செய்து முடிக்க இயலும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இது முகமது பின் துக்ளக் எடுத்த நடவடிக்கை போன்றது. இது பொதுமக்களுக்கு ஏகப்பட்ட சங்கடங்களை தோற்றுவிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நவம்பர் 10 அன்றும், மும்பை உயர்நீதி மன்றத்தில் தீபாவளி விடுமுறைகள் முடிந்த பின்னரும் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
மனுவை வாசிக்க இந்த இணைப்பை தொடரவும்