ராகவா லாரன்ஸ் தனது இணைய தள பக்கத்தில் சைக்கிளில் டீ விற்கும் இளைஞனின் வீடியோ பகிர்ந்தார். பின்னர் அவர் கூறியதாவது; இந்த இளைஞனின் தன்னம்பிக் கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனித னுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்; என கூறி உள்ளார்.
வீடியோவில் இளைஞன் கூறும்போது,’
வழிபோக்கனாக மதுரை வந்து பிச்சை எடுத்து தினமும் 100 அல்லது 150 ரூபாய் சம்பாதித்து அதில் 50 ரூபாய் செலவு போக மீதம் சேமித்த பணத்தில் சைக்கிளில் வைத்து தெருத் தெருவாக சென்று டீ விற்கிறேன்.
அந்த வருமானத்தில் வைத்து தினமும் தெரு மற்றும் கோவில் அருகே அமர்திருக்கும் ஆதரவற்றவர்கள் 15 பேருக்கு சாப்பாடு தண்ணீர் பாட்டில் தருகிறேன். சாப்பாட்டை வானி தராமல் நானே சமைத்து தருகிறேன். பெரிய விடுதி கட்டி அதில் ஆதரவற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எந்து லட்சியம் இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்”என்று வீடியோ பகிர்ந்திருக்கிறார்.