தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலை துண்டித்தும், உடல்கள் துண்டு துண்டாக கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். திமுக அரசின் கீழ், சட்டம், ஒழுங்கு எவ்வளவு செயலிழந்து போய் விட்டது என்பதை, வேதனையுடன் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது இதுபோன்ற சம்பவங்கள் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக மதுபானம் விற்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே மதுவால் அதிக விபத்துகள் ஏற்படும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே மதுவால் கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. மது மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் தாராளமாக எங்கும் கிடைக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள், மாணவிகள் முதல் முதியோர்கள் வரை பலரும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால், கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சி 2021ல் பதவி ஏற்றபிறகு, கடந்த 5 ஆண்டுகளில் 8,752 கொலைகள் – இதில் 1,977 பெண்கள்! பெண்களுக்கு எதிராக 44 ஆயிரம் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,200 பாலியல் குற்றங்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இது சாமானிய மக்களிடையே அச்சத்தையும், திமுகஅரசு மீது அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகளம் அருகே குளத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, இயற்கை உபாதையை கழிக்க காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில், அந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் கழிப்பறை இல்லை என்பது தெரியவந்ததுள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கும், மத்தியஅரசுக்கும் தலைகுனிவு என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது 17 வயது மகள் குறுக்குச்சாலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 10-ம் தேதி 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதிவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். மாலை சுமார் 6 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த போலீஸார், பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து சுப்புராஜ் இன்று (11-ம் தேதி) காலை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே, இன்று மாலை சுமார் 5 மணியளவில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். பள்ளி மாணவி காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களைப் பார்த்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் குளத்தூர் – குறுக்குச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவியின் தாய் கூறும்போது, “குளத்தூர் காவல் நிலையத்திலும் பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்த போதே போலீசார் உரிய முறையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இந்த துயர சம்பவம் நடந்திருக்காது. காவல்துறையினரின் அலட்சியத்தால் என் மகள் உயிரிழந்துள்ளார்” என குற்றம் சாட்டினார்.
மாணவியின் உறவினர் கூறுகையில், “புகார் அளிக்க சென்றபோது போலீசார் தவறான வார்த்தைகளால் மிகவும் மோசமாக பேசினர். உடலைக் கூட போலீசார் கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் தான் கண்டுபிடித்தோம். அதன் பின்னர் தான் போலீசார் வந்தனர். இந்த விவகாரத்தில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மாணவியின் அத்தை கூறுகையில், “காலையில் காட்டுப்பகுதியில் தேடிப் பார்த்தோம். அப்போது எதுவும் இல்லை. பிறகு மதியம் மீண்டும் தேடச் சென்ற போது அங்கு உடல் கிடந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டபோது, “சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என்று கூறியுள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என்று அவருடைய குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் போலீஸார் மாணவியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் ஆறுதல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் நேரில் வந்து மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி, மாநில பாஜக முன்னாள் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி
திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான, கனிமொழி தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து மென்மையான பதிவை மட்டுமே ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கண்டனம்…
மத்தியஅரசு மற்றும் வேறு மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் கொதித்தெழும் கனிமொழி, தனது தொகுதியில் நடைபெற்ற ஒரு அசம்பாவித சம்பவத்தை கண்டிக்ககூட திராணியற்ற நிலையில் பதிவிட்டு இருப்பதற்கு, நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
2ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்க முடியாத உங்களுக்கு, இந்த பதிவு அவசியமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
, “உங்கள் தொகுதி என்பதற்காக வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு, பூசி மொழுகிய இந்த ட்விட்டர் பதிவு அவசியம் தானா?
அதிமுக ஆட்சியின் போது நடந்த குற்றச்சம்பவங்களுக்கும் இப்படி தான் வேதனை மட்டுமே தெரிவித்தீர்களா?
எதிர்க்கட்சியாக இருந்தபோது மட்டும், பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என ஒவ்வொரு சம்பவத்திற்கு கண்டன அறிக்கைகள் வெளியிட்டதோடு, சாலையில் இறங்கி போராடினீர்களே? அந்த ஆவேசம் எல்லாம் உங்கள் அண்ணனின் ஆட்சியில் எங்கே போனது? இப்போது மட்டும் பெண்களின் பாதுகாப்பு பற்றிய உங்கள் அக்கறை காற்றில் பறந்துவிட்டதா?”
“கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 2 வயது, 7 வயது மற்றும் 14 வயது சிறுமிகள் தொடங்கி 70 வயது மூதாட்டி வரை தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலான குற்றங்கள் போதையில் இருந்த நபர்களால் நிகழ்த்தப்பட்டு இருப்பது விசாரணையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதிமுக ஆட்சியின்போது மட்டுமே, தமிழக பெண்களை விதவைகளாக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என முழக்கமிட்டுவிட்டு, இப்போது அமைதி காப்பது நியாயமா? உங்கள் ஆட்சி தானே, உங்கள் கண் முன்பே சிறுமிகள் தொடங்கி மூதாட்டிகள் வரை பாதிக்கப்படுகின்றனரே? அது உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையா? அல்லது அண்ணனின் ஆட்சி என்பதால் வாயடைத்து போய்விட்டீர்களா?”
என சரமாரியாக கேள்வி கனைகளை தொடுத்துள்ளார். இதேபோன்று பலரும், கனிமொழி இரட்டை நிலைப்பாட்டில் செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி
- அலட்சிய காவல்துறை: காணாமல் போன மாணவியைத் தேடாமல், பெற்றோர் புகாரளித்தபோது காவல்துறை அலட்சியமாகவும், பாதிக்கப்பட்ட பெண் மீதே சந்தேகப்படும் வகையிலும் செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
- திமுக அரசுக்கு கண்டனம்: குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- பாதுகாப்பற்ற தமிழகம்: தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாகவும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்:
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 8,752 கொலைகள் நடந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டு காலத்தில் 8,752 கொலைகள் நடந்துள்ளன. இந்தியாவிலேயே அதிக கொலைகள் நடந்த மாநிலம் தமிழ்நாடு. 1,977 பெண்களும், 361 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். 38 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் திமுக அரசு.
திமுக அரசு, மதுபானங்களை விற்கவில்லை, மதுவை திணித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக மதுபானம் விற்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே மதுவால் அதிக விபத்துகள் ஏற்படும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே மதுவால் கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. Advertise with us கடந்த 5 ஆண்டு காலத்தில் பெண்களுக்கு எதிராக 44 ஆயிரம் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,200 பாலியல் குற்றங்கள்.
மதுராந்தகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியுள்ளது ஒரு மனித மிருகம். 4 வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தையை ஒரு மிருகம் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளது. அவர் திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர் எனக் கூறுகிறார்கள். கும்மிடிப்பூண்டி சம்பவம், அண்ணா பல்கலைக் கழக சம்பவம் என ஏகப்பட்ட பாலியல் குற்றங்கள். இவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இத்தகைய மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என, மூன்று மகள்களின் தந்தையாக உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். Advertise with us நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் தற்கொலை திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது. மத்தியிலும் நமது ஆட்சி, மாநிலத்திலும் நமது ஆட்சி இருக்க வேண்டும். ஒரு விவசாயியை முதல்வராகக் கொண்டுவர வேண்டும். இரண்டு மாதங்களில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
’’நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள். இதனை தடுக்க இயலாத இந்த அரசு தன் அருமை பெருமைகளை பேசி சுகம் காண்பதை வழக்கமாக கொண்டுள்ளது. சென்னை, தாம்பரத்தில் இருந்து மதுராந்தகம் அருகே கீழக்கண்டை கிராமத்திற்கு கடந்த 9-ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் 17 வயது சிறுவனும், இரு சிறுமிகளும் சென்று கொண்டிருந்தபோது, தேவாதூர் அருகே போதையில் இருந்த இருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை துரத்திச் சென்று தாக்கியுள்ளனர்.
இதில் சிறுவனும், ஒரு சிறுமியும் தப்பிய நிலையில் அவர்களிடம் சிக்கிய 17வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிப்புக்கு உள்ளான சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனித்துச் சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னை தமிழ்நாட்டின் அப்பா என கூறிக்கொள்வது வெட்கக்கேடு.
இந்த ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை என பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக தொடரும் கொடுமை களில் இவையும் சேர்ந்துள்ளது.
“எரியும் விறகை எடுத்தால்தான் கொதிப்பது அடங்கும்” என்ற முதுமொழிக்கு ஏற்ப இனியாவது மதுவை அறவே ஒழித்து பெண்கள் அச்சமின்றி வாழ அரசு மதுக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும் கஞ்சா நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை:
இது குறித்து தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழ்நாட்டில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண் குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை.
மேலும், நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒரு பாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம். நாமக்கல்லில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை. மானாமதுரையில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம். சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும், சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்று விட்டு, அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை. சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை. கோயம்புத்தூர் அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டுவீச்சு… எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழ்நாட்டை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால், இந்தத் திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்? பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை, முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை, இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை, இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? தமிழ்நாடு முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம், தினம் நடந்து வருகிறது. தன்னுடைய ஆட்சியில் தமிழ்நாடே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழ்நாடு மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – கொலைகள்: சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை