சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்தில் அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை குற்றம் சாட்டி உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று அறிவித்தபடி, இன்று காலை காலில் செருப்பு அணியாமல், சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சூளுரைத்த அண்ணாமலை, இன்றுமுதல் 48 நாட்கள் செருப்பு அணியாமல் விரதம் மேற்கொள்வதாகவும், அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதன்படி, இன்று அவர் தனது போராட்டத்தை தொடங்கினார். இன்று காலை 10 மணி அளவில், கோவையில் உள்ள வீட்டுக்கு வெளியே, பச்சை நிற வெட்டி அணிந்து மேல் சட்டை அணியாமல், தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம் தொடங்கினார். இதையடுத்து பேசிய, அவர், நான் இன்னும் நல்லவன் ஆகிருக்கேன்”.. என கூறினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே 6 முறை சாட்டையால் அடித்து விநோத போராட்டத்தை தொடங்கி உள்ளார். அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்காரத்தில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எஃப்ஐஆரை வெளியிட்டது கடுமையான குற்றச்செயல் என்ற குற்றச்சாட்டுக்களுடன் தமிழக அரசியல் களத்தை வினோதமானபோராட்த்தை தொடங்கி பரபரப்பாக்கி உள்ளார்.