சென்னை,

னது கடைக்கு வாடகை உயர்த்தியுள்ளதாக,நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்  சென்னை மாநகராட்சி மீது தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

நடிகர் லதா ரஜினிகாந்த் சென்னை பெருநகர மாநகராட்சி மீது  வழக்கு தொடர்ந்தார். கடந்த 25 ஆண்டுகளாக மாநகராட்சி கட்டிடத்தில் டிராவல்ஸ் ஏஜன்சி கடை நடத்தி வரும் லதா ரஜினிகாந்த் 3702 ரூபாய் மட்டுமே வாடகை செலுத்தி வந்தார்.

இந்த கடைக்கு சென்னை மாநகராட்சி தற்போதைய நிலவரப்படி, வாடகை கட்டணத்தை 21,160 என நிர்ண யித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாநகராட்சி மீது பிரபல நடிகரான ரஜினிகாந்தின் மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இங்கு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இதில் ஒரு கடை லதா ரஜினிகாந்த் வாடகைக்கு எடுத்து டிராவல் ஏஜன்சி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வாடகையாக பல ஆண்டுகளாக  சென்னை மாநகராட்சி  ரூ.3,702 (மூவாயிரத்து எழுநூற்றி இரண்டு) மட்டுமே வசூலித்து வந்துள்ளது.

தற்போது அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு மற்றும் பரிவர்த்தனை காரணமாக கடைகளின் வாடகையை சென்னை மாநகராட்சி உயர்த்தி உள்ளது. அதன்படி தற்போதைய நிலவரப்படி கடைக்கு வாடகை மாதம் ரூ.21,160 கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இதை எதிர்த்து லதா ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் மோகன் மேனன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் என்ன கூறியிருந்தார் தெரியுமா?

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள பண மதிப்பிழப்பு , ஜிஎஸ்டி காரணமாகவும் தங்களது வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், எங்களின் வருமானம் குறைந்துள்ளது. எனவே, வாடகை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தார்.

லதா ரஜினிகாந்தின் கணவர் நடிகர் ரஜினிகாந்த், மோடி அறிவித்துள்ள பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை குறித்து பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், அவரது மனைவி லதா, தனது கணவரின் கருத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாடகை உயர்வு மாநகராட்சி விதிப்படி 9 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வாடிக்கை என்றும், அதன்படி தற்போது வாடகை உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், இதுகுறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வைத்தியநாதன், லதா ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து, அவரது  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வரும் லதா, தனது கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் சிறப்பாக செயல்படுவார் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்,  ரஜினிக்கு லதா போன்ற மனைவி இருக்கும்வரை அவர் அரசியலுக்கு வந்து கிழிக்க போறாரு என்று பதிவிட்டுள்ளார்கள்.

ஏற்கனவே லதா ரஜினிகாந்த் தனது பள்ளிக் கட்டிடத்துக்கு  வாடகை பாக்கி தராததால்  கட்டிட உரிமையாளர் பள்ளிக்கு   பூட்டு போட்டதும், பின்னர் நீதிமன்றம் தலையிட்டு பள்ளி திறக்க வைத்ததும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகரின் மனைவி இதுபோன்று வாடகை கட்ட முடியவில்லை என்று வழக்கு தொடர்ந்திருப்பதும், அவரது  செயல் குறித்தும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்துக்கு 80 கோடி வாங்குறாரு…. நீங்க நடத்துற பள்ளிக்கூடத்துக்கு வாடகையே குடுக்குறதில்ல…  வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சரியாக சம்பளம் கொடுப்பதில்லை என்று அவர்மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்துள்ளது.

இந்நிலையில், பிரபலமான ஒரு பகுதியில் கடை நடத்தி,   குறைந்த வாடகை கொடுத்து அரசை ஏமாற்றி வந்த லதா ரஜினிகாந்த், தற்போது வாடகை உயர்த்தியதை எதிர்த்து வழக்கு போட்டிருப்பது அவரது அளப்பற்ற ஆசைக்கு அளவே இல்லை என்பதும், அவரது ஆசைக்கு சென்னை  உயர்நீதி மன்றம் குட்டு வைத்திருப்பது சரியானதே என்றும் சமுக வளைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.