புதுச்சேரி:
புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடியை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி. பதவியேற்றபிறகு, புதுச்சேரி வளர்ச்சிக்காக சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், ஆளுங்கட்சியினர், அரசியல்வாதிகளி டையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கிரண்பேடியின் நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
புதுவையை தூய்மையாக்க கிரண்பேடி எடுத்து வரும் நடவடிக்கைகள் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
புதுச்சேரியில் அமல்படுத்தப்பட இருக்கும், தூய்மை இந்தியா இயக்கத்திற்கு நடிகர் ரஜினிகாந்தை நல்லெண்ண தூதராக நியமிக்க விரும்புவதாகவும், ரஜினி இதுகுறித்த எந்தவித முடிவும் தெரிவிக்காத நிலையில் தற்போது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கிரண்பேடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இதன் காரணமாக ரஜினிகாந்த் புதுச்சேரிக்கான நல்லெண்ண தூதராக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.