டில்லி
டில்லியில் தங்களுடன் தொகுதி பங்கீட்டுக்கு ஒப்புக் கொண்டால் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே மக்களவை தேர்தலில் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் இரு கட்சிகள் இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்தும் கூட்டணி முடியாமல் இழுபறி நிலையில் உள்ளது. இதற்கு டில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட விரும்பியதே காரணம் ஆகும்.
காங்கிரஸ் கட்சி டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகின்றது. இறுதியாக ஆம் ஆத்மி கட்சிக்கு மூன்று தொகுதிகள் அளிக்க காங்கிரஸ் முன் வந்துள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் பிடிவாதத்த்தினால் இந்த கூட்டணி இன்னும் அமையாமல் உள்ளது.
டில்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி சி சாக்கோ, “ நாங்கள் டில்லியில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறோம். ஆயினும் ஆம் ஆத்மி கட்சிக்கு மூன்று தொகுதிகள் அளிக்க முன்வந்துள்ளோம். ஆனால் ஆம் ஆத்மி கட்சி டில்லியிலும் போட்டியிட்டு மற்ற மாநிலங்களிலும் கூட்டணியில் தொகுதிகள் கேட்கின்றன.
டில்லியின் நிலைமை வேறு மற்ற மாநிலங்கள் நிலை வேறு என்பதை புரிந்துக் கொண்டு ஆம் ஆத்மி கட்சி நடக்க வேண்டும். டில்லியில் தொகுதி பங்கீட்டுக்கு அந்தக் கட்சி ஒப்புக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்புக் கொண்டால் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்