அரியலூர்: நீட் தேர்வு காரணமாக மருத்துவ கனவு கலைந்ததால், தற்கொலை செய்துகெண்ட அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் பெயர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு   அனிதாவின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியும் சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, அனிதாவின் சகோதரர்களில் ஒருவரான பாண்டியன் (வயது 27) என்பவரை குன்னம் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்றத் தொகுதியான குன்னம் தொகுதியின் வேட்பாளராக  மாநில பிஎஸ்பி அறிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதி மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில், அனிதாவின் சகோதரர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

பிஎஸ்பியின் தலைமையின் இந்த அறிவிப்புக்கு, அனிதாவின் குடும்பத்தினர் கடும்கண்டம் தெரிவித்துள்ளனர். பாண்டியனுக்கு  பதிலாக மாற்று வேட்பாளரை அறிவிக்குமாறு அனிதாவின் தந்தையும் மற்றொரு மூத்த சகோதரரும் கட்சியை வலியுறுத்தி உள்ளனர்.

மாநிலத்தில் நீட்-க்கு எதிரான இயக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தீவிரமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டும் அனிதாவின் குடும்பத்தினர், தற்போது,  வாக்குகளைப் பெற அனிதாவின் சகோதரரைப் பயன்படுத்த விரும்புவதாகவும் , ஆனால்,  வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ் பாண்டியன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக  பிஎஸ்பி கட்சியுடன் தொடர்பு இல்லாத நிலையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  பாண்டியடின அரசியலுக்கு கொண்டு வந்திருப்பது சந்தர்ப்பவாதம்தான்” என்று அனிதாவின் மற்றொரு சகோதரர் சமூக ஊடகத்தில்பதிவிட்டுள்ளார். மேலும்,அனிதாவின் மரணத்திற்கு முன்பே, தாங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் ஆதரவளித்து வருகிறோம். எங்களுக்கு உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் எங்களுக்கு எந்தவித  தொடர்பும் இல்லை என்பதுடன், குடும்பத்தில் மோதலை ஏற்படுத்திவே பிஎஸ்பி தலைமை, பாண்டியன் பெயரை அறிவித்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.