டில்லி
வருமான வரி கணக்கு அளிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருடா வருடம் வருமான வரி கணக்கு அளிக்க வேண்டியது சட்டப்படி கட்டாயம் ஆகும். இந்த கணக்கில் வருட மொத்த வருமானம் அது வந்த இனம் வாரியாக பதிய வேண்டும். அதன் பிறகு அரசு அளிக்கும் தள்ளுபடியை கழித்து நிகர வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்ற வரியையும் கணக்கிட வேண்டும்.
இதில் ஏற்கனவே இந்த வருடம் வரி ஏதும் செலுத்தி இருந்தால் அதை கழிக்க வேண்டும். அதன் பிறகு நிகர வரி பாக்கி இருந்தால் செலுத்த வேண்டும். இல்லை எனில் கணக்கு சரி பார்க்கப்பட்ட பிறகு அதிகமாக செலுத்திய வரித்தொகை திரும்ப அளிக்கப்படும்.
இவ்வாறு வருமான வரிக்கணக்கு அளிக்க இந்த வருடம் ஜூலை மாதம் 31 ஆ தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்த கடைசி தேதியை ஒரு மாதம் நீட்டித்துள்ளது.
தற்போது வருமான வரி கணக்கு அளிக்க கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 31 ஆகும்.