சென்னை

மிழகத்தில் மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.   இந்த படிப்புக்களில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த மாதம் அதாவது ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவ படிப்பு மற்றும் ஆய்வு இயக்குநரகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த அறிவிப்பில்

”மாணவர்களிடம் இருந்து எம் பி பி எஸ் மற்றும் பிடிஎஸ் பட்டப்படிப்புகளில் சேர  விண்ணப்பிப்பதற்குக் கால அவகாசம் நீட்டிப்பு குறித்து பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி ஜூலை 12 மாஐ 5 மணி என நீட்டிக்கப்படுகிறது”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.