சென்னை
பொறியியல் செமஸ்டர் தேர்வில் பங்கேற்க அரியர் மானவர்களுக்கு இறுதி வாய்ப்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது/

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுகள், அடுத்த மாதம் (ஜூன்) தொடங்க உள்ளது. அதே வேளையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில், படித்து பல்கலைக்கழக வரன்முறையில் அனுமதிக்கப்பட்டுள்ள படிப்புக்கான உச்ச காலத்தை கடந்தும் பல்வேறு மாணவர்கள் அரியர் வைத்திருக்கிறார்கள்.
எனவே அந்த வகையான மாணவர்கள், பயன்பெறும் வகையில் வருகிற ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வில் அவர்கள் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம் அவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை, விழுப்புரம், ஆரணி, ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மையங்களில் நடத்தப்பட உள்ள இந்த தேர்வுக்கு தேர்வர்கள், https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் வருகிற 17-ந்தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், சிறப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. https://aucoe.annauniv.eduஎன்ற இணையதளத்தில் தேர்வு அட்டவணை, ஹால்டிக்கெட் ஆகியவை குறித்த விவரங்கள் வருகிற 27-ந்தேதிக்கு பிறகு தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும்.