சென்னை:

மிழகத்தில் பணியாற்றி வரும்  80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை மாற்றம் குறித்து அறிவித்து இருந்தார். மேலும் பள்ளி மற்றும் பள்ளிகளின் சுத்தமான குடிநீர், அதுபோல  கழிவறை சுத்தம் குறித்தும் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் செங்கோட்டையன்,  அடுத்த கல்வி யாண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளி களின்  ஆசிரியர்களின் வருகை பதிவேடும்,  பயோபெட்ரிக் முறையில் பதியப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் தெரிவுத்தார்.

மேலும் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள் தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகை யில்  நீட் பயிற்சி மையங்கள் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஆசிரியர் ஆசிரியைகளுக்கும் லேப்டாப் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.