கொழும்பு:

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு  முஸ்லிம் மத போதகர்கள் உட்பட 600 வெளிநாட்டினரை இலங்கை வெளியேற்றியுள்ளது.

மாலத்தீவைசர் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250 பேர் கொல்லப்பட்டனர். இதில் 11 இந்தியர்கள் அடங்குவர்.

தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது 600 வெளிநாட்டினர் சுற்றுலா விசாவில் இலங்கையில் இருந்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் இலங்கையிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கடந்த செவ்வாய்க் கிழமை முதல் இலங்கை அரசு தொடங்கியது.

பாகிஸ்தான் மத போதகர்கள் இலங்கை, பங்களாதேஷ், மியான்மர், மாலத்தீவு உட்பட ஆசிய நாடுகளில் மசூதிகளில் ஊடுருவியது தெரியவந்துள்ளது.

தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதே இவர்களது குறிக்கோளாக இருந்துள்ளது.
அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற சர்வதேச தீவிரவாத குழுக்களுடன் இந்த மத போதகர்களுக்கு தொடர்பு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் ஜஹ்ரான் ஹாசிம் தென் இந்தியாவில் 3 மாதங்கள் தங்கியிருந்துள்ளார். ஆனால், உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.