ஊட்டி: 
தொடர் மழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு செய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் பாறாங்கல் உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரயில் பாதையை மூடியது. பாதையோரத்திலிருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே விழுந்தன.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம்,  ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்கள் ரயில் பாதையைச் சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். ரயில் பாதையில் விழுந்து கிடந்த பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டன.
ரயில் பாதையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. ரயில் பாதையைச் சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று தொடங்கியது.
இந்நிலையில், தொடர் மழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.