சசிகலா, தினகரன் மீது நிலஅபகரிப்பு புகார்!

காஞ்சிபுரம் :

வி.கே. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மற்றும் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் மீது கண்ணன் என்பவர் நில அபகரிப்பு புகார் அளித்துள்ளார்.

சிறுதாவூர் பகுதியில் தனக்குச் சொந்தமான  ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை சசிகலா, தினகரன் இருவரும் அபகரித்ததாக அப்புகாரில் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து காஞ்சிபுரம் நிலஅபகரிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த துவங்கியிருக்கிறார்கள்.

 


English Summary
Land Grabbing Case against Sasikala, Dhinakaran