சென்னை: பிரபலமான வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.258 கோடி நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த அபகரிப் புக்கு உடந்தையாக இருந்த, அரசு பதிவுத்துறையின் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.258 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு! வேளச்சேரி சாா்-பதிவாளா் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலுக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இதில் பல சொத்துக்கள் போலி ஆவனங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ளதை மீட்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், வடபழனி கோவிலுக்கு சொந்தமாக, தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் ரூ.258 கோடி மதிப்புள்ள 9.86 ஏக்கா் நிலம் திடீரென மாயமானது. அந்த நிலத்தை போலி ஆவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் போலில், ஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்து வந்தது. முதல்கட்ட விசாரணையில், இந்த 9.86 ஏக்கா் நிலம் கடந்த 1943-இல் முருக பக்தா் பங்காரு சுவாமி நாயுடு என்பவரால் வடபழனி முருகன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள பத்திரப்பதிவு ஆவணங் களில், ‘கோயிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவில் 9 நாள் நிகழ்வுகளை தனது குடும்பத்தினா், வாரிசுகள் நடத்தத் தவறினால், தான் தானமாக வழங்கிய அந்த நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த நிலத்தின் பாதுகாவலராகவும், வருவாயையும் தனது குடும்பத்தினா் அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் அவா்கள், ஐப்பசி திருவிழா 9 நாள் நிகழ்ச்சிகளை நடத்தவில்லை எனில் நிலத்தில் கிடைக்கும் வருவாய் கோயிலுக்குச் சொந்தமாகும். எக் காரணம் கொண்டும் அந்த நிலத்துக்கு எனது குடும்பத்தினா் உரிமை கோர முடியாது. அந்த நிலம் கோயில் நிா்வாகத்துக்குச் சொந்தமானது’ என குறிப்பிட்டுள்ளாா்.
ஆனால்,. இதை மறைத்து, அவரது வாரிசுகள், தாம்பரம் வட்டாட்சியா் ஆதரவுடன், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்கான வருவாய் வருவாய் ஆவணங்களை மாற்றுவதற்கு முயற்சி நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதற்கு ஆதரவாக தாம்பரம் சாா்-பதிவாளராக இருந்த விவேகானந்தன் செயல்பட்டு வந்துள்ளார். விதிமுறைகளை மீறி ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையின், பத்திரப் பதிவுத்துறை விதிமுறைகளை மீறியது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது, மோசடி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விவேகானந்தன், கந்தசாமி, அவரது மகன்கள் மணி, ரமேஷ் ஆகியோா் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் போலி ஆவணங்களை பதிவு செய்ய உதவிய விவேகானந்தன் தற்போது வேளச்சேரி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சாா்-பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். அவர்மீது இதுவரை நடவடிக்கை பாயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.