கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்று லான்செட் மருத்துவ இதழ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பாதிப்பிற்கு உள்ளான 2,36,379 பேரின் மருத்துவ தரவுகளை ஆய்வு செய்ததில், இதில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட ஆறு மாதங்களில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

Courtesy : Lancet

அதிகப்படியான நோயாளிகளுக்கு, நரம்பியல் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதும், சிலருக்கு, நுரையீரல் தொற்று, சிறுநீரக கோளாறு மற்றும் ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் இருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும், இதய கோளாறு, நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என்பதை தனது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

கொரோனா தொற்று நோய், சளி, காய்ச்சல் போன்று சாதாரண தொற்று அல்ல என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்திருப்பதை தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியம் அதிகரித்திருப்பதாக சுகாதார ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.