சென்னை:
லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.பி. முகமது தஸ்லிமுதீன். இவர் பீஹாரின் அராரியா தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், இன்று மரணம் அடைந்தார்.
அவர் உள்துறை இணை அமைச்சராகவும் சில காலம் இருந்துள்ளார்